ஏன் மனதை சாட்சிக்கு
அழைக்க வேண்டும்....
சொல்வதெல்லாம் உண்மை
என்று
வாக்கு அளித்து விட்டு
மெய் மட்டுமா பேசுகிறோம்.....
முதலீடு வருவதை எண்ணி
முக்கியமானதை மறைக்கிறோமா....
நாம் அடைந்த துன்பத்தை
பிறர்
அடைய கூடாது என்று நினைக்கிறோமா....
ஊழல் பெருகிட
ஊன் தின்னிட
இரத்தம் உறிஞ்சிட
இங்கே ஒரு கூட்டம்
வலுவாய் மாட்டிய வேலையாட்கள்
திறமையோடு போரிட
முடியாத கயவன்
அதிகாரத்தோடும்....அகந்தையோடும்
ஆடுகிறான் ...சூதாட்டம்...
தர்மம் வெல்லும்
என்று கேட்டிருப்போம்....(அதும்)
புயலுக்கே பின்னே....
அதிசய பிறவி மனிதன்
என்று பெருமை பேசிட
இங்கே யார் மனிதத்தோடு
இருக்கிறோம்.......
வாய்ப்புக்காக காத்திருப்போர்
பலர்....
அதை திருட நினைக்கிற சிலர்
இப்படியே சென்றால்
இதற்க்கு முற்றுப்புள்ளி......
சிந்தனையுடன்
உங்கள்
கிராமத்து குரல்.......
Comments
Post a Comment