Skip to main content

Posts

Showing posts from November, 2020

உண்மைகள்

        உண்மைகள் ஒரு போதும்    சாவதில்லை......    ஊலாவிக்கொண்டே இருக்கிறது....    தக்க சமயம் பார்த்து    தர்மம் வெல்லும்.....    அகந்தைகள் கொண்ட மனம்    அழிவை நோக்கி செல்லும்....    பண்பை கொண்ட மனம்    அன்பை நோக்கி செல்லும்....        

வண்ணங்கள் அழகு எதில்

        வண்ணங்களின் அழகு எதில்        உள்ளது...     ஓவியர்களின் வண்ணம்     தீட்டுதலில் உள்ளதா     அல்லது     வானவில்லில் உள்ளதா     என்று      நாம் ஆராய்கையில்     வண்ணம் சொல்கிறது     ஏன் இத்தனை ஆராய்தல்     நாங்கள் எப்போதும் அழகு தான்     நாங்கள் வண்ணங்களாக      இருக்கும் வரை      உங்கள் எண்ணங்களாக அல்ல     வண்ணங்கள் சொல்கின்றன     நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்     நீங்கள்+ மனிதர்கள் இடையே      வந்து     பாகுபாட்டை திணிக்க வேண்டாம்     என்று.....     என்ன ஒரு அற்புதமான பதில்     அல்லவா                              சிந்தனையுடன்      உங்கள் கிராமத்து குரல்  

தாய்த்தமிழ்

கம்பன் கையில் பிறந்த தமிழே பாரதியின் எழுத்தில் எழுந்த சுடரே பண்பையும், பகுத்தறிவையும் ஊட்டுகின்ற மொழியே அனைவரின் இரத்த நாளங்களில் ஊறிய தமிழே தனித்து பிறந்த மொழியாம் சிறந்தே  விளங்கும் மொழியாம் மூத்த மொழியாம் மூன்று சங்கம் கண்ட மொழியாம் மூவேந்தரை வளர்த்த மொழியாம்... தித்திப்பாய் இருக்கும்   மொழியாம் திகட்டாத மொழியாம் கலைகளையும்  பண்பாட்டையும் உருவாக்கிய மொழியாம் ஈடு இணையில்லா இறையை கூறும் மொழியாம் தத்துவ   மெய்பொருளை உள்ளடக்கிய மொழியாம் அயல்நாட்டவரை  அரவணைக்கும் மொழியாம் தன்னகரில்லா தரணி மொழியாம்......வாழ்க வாழவே..... உங்கள், கிராமத்து குரல்

மனசாட்சி

ஏன் மனதை சாட்சிக்கு  அழைக்க வேண்டும்.... சொல்வதெல்லாம் உண்மை என்று வாக்கு அளித்து விட்டு மெய் மட்டுமா பேசுகிறோம்..... முதலீடு வருவதை எண்ணி முக்கியமானதை மறைக்கிறோமா.... நாம் அடைந்த துன்பத்தை  பிறர் அடைய கூடாது என்று நினைக்கிறோமா.... ஊழல் பெருகிட ஊன் தின்னிட இரத்தம் உறிஞ்சிட இங்கே ஒரு கூட்டம் வலுவாய் மாட்டிய வேலையாட்கள் திறமையோடு போரிட  முடியாத கயவன் அதிகாரத்தோடும்....அகந்தையோடும் ஆடுகிறான் ...சூதாட்டம்... தர்மம் வெல்லும்  என்று கேட்டிருப்போம்....(அதும்) புயலுக்கே பின்னே.... அதிசய பிறவி மனிதன்  என்று பெருமை பேசிட இங்கே யார் மனிதத்தோடு இருக்கிறோம்....... வாய்ப்புக்காக காத்திருப்போர் பலர்.... அதை திருட நினைக்கிற  சிலர் இப்படியே சென்றால் இதற்க்கு முற்றுப்புள்ளி...... சிந்தனையுடன் உங்கள்  கிராமத்து குரல்.......  

மனம் .....மாற்றம்....

      மனம் என்பது மாறக்கூடியது ஆனால் மனிதத்தோடு இருக்க வேண்டும் இருப்பதோ ஒரு வாழ்வு ஏன் போட்டி, பொறாமைகள் பணம் என்ற காகிதம் உறவை கெடுத்து பன்பை குறைத்து தன்னிலை துறக்க செய்யும் அதற்க்கு நாம் அடிமை ஆகுதல் வேண்டாம் நாம் அதை அடிமையாக்குதல் வேண்டும்..... உறவுகளே........    

🅼🆈🆂🆃🅴🆁🅸🅾🆄🆂

        Life is a Miracle One    We are just Accepting Everything   Not  Only Humans Afraid All Things   Every Living Soul has Afraid various    Things.... So, Don't Think Too much Live Your style  Be Happy and Think wisely......

பயணம்....

   வாழ்க்கை பயணம் என்பது    சில நேரம் நன்மையாகவும்    பல நேரம் சிக்கலாகவும்     இருக்கலாம்.....    அதில் இருந்து நம்மை     விடுவித்து     தாராளமான மனதோடு                 நடைபோடுங்கள்.....    நல்ல மனதோடு    நன்மை கிடைக்கும்......        

குடிசை வாழ்க்கை

மண் வீடு பசுமையான மரங்கள் ஒளிமயமான காலை நேரம் அம்மாவின் ஓசை இசை குருவிகளின் சத்தம் ஆடு ,மாடுகளின் அரவணைப்பு பூனையின் குறும்பு நாய்களின் பாசம் என்று ரம்மியமான வாழ்க்கை அந்த காலம்.......... எந்த விதமான புலம்பல் இல்லாத காலம் அன்பு கூடியிருந்த காலம் பண்டிகை என்றால் விழாக்கோலம் மீண்டும் வரம் வேண்டும் ஆதி காலத்தில் பிறப்பதற்கு மட்டும் அல்ல...... ஒற்றுமை வாழ்வு வாழ பொது நலமோடு வாழ.....