Skip to main content

Posts

வீரத்தமிழன்

வீரத்தமிழன் மூன்று சங்கம் அமைத்து  முத்தமிழை முத்தாய் வடித்தவன் அசராத கட்டிடக்கலைக் கலையை கற்றவன் வீரத்திறக்கு பேர் போனவன் பகைமையோடு இருப்பவரை பகடையாடுபவன் ஆணும் பெண்ணும் சரி நிகர் என்று உரைத்த புலவன் கொண்ட தமிழினம் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து பேசும் விவேகம் உடையவன் தாயையும் தமிழையும் சுவாசிப்பவன் நம்பினோரை காப்பாற்றுபவன் தன்னுயிரை விடுத்து தமிழ்க் கொடி ஏந்துபவன் தமிழன் என்று மார்பு  தட்டி சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியில் தனிப்பெயர் பெற்றிடு தரணித்தமிழ் போற்ற வாழ்ந்திடு தமிழ் விதை விதைத்திடு விருட்சமாய் விளைந்திடு தமிழினம் காத்திடு தன்மானத்தோடு வாழ்ந்திடு விவசாயம் காத்திடு வீறு கொண்டு எழுந்திடு அடக்குமுறை எழுந்தால் திறம்பட சிந்தித்திடு பார் போற்ற வாழ்ந்திடு வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும் தமிழா தன்னகரில்லா தனித்திறமையை  வெளிக்கொண்டிடு அகிலத்தில் பெயர் வெட்டிடு........ கிராமத்து குரல்
Recent posts

பிறை நிலா

விவசாயி

சாதனைகள் புரிவதே

       வாழ்கையில் சோதனைகள்   வருவது சாதனைகள்    புரிவதற்க்கே......   கடினமான சூழல் வரும்போது    அதை எதிர்கொண்டு வெற்றி   காண வேண்டும்...

வழிகள்

      மனிதன் அற்புதமான பிறவி   ஏனோ.....  அர்த்தமற்ற செயல்களை பல  செயல்களை செய்கிறான்.....  கிடைத்தற்கரிய வாழ்வை   பயனுள்ளதாக மாற்ற வேண்டும்...  பிறர்க்கு உதவ வேண்டும்....  இருப்பதை கொடுத்து  இன்புற செய்ய வேண்டும்... நல்லதை நினைத்து  நிம்மதியோடும் நிறைவோடும் வாழ வேண்டும்......

உண்மைகள்

        உண்மைகள் ஒரு போதும்    சாவதில்லை......    ஊலாவிக்கொண்டே இருக்கிறது....    தக்க சமயம் பார்த்து    தர்மம் வெல்லும்.....    அகந்தைகள் கொண்ட மனம்    அழிவை நோக்கி செல்லும்....    பண்பை கொண்ட மனம்    அன்பை நோக்கி செல்லும்....        

வண்ணங்கள் அழகு எதில்

        வண்ணங்களின் அழகு எதில்        உள்ளது...     ஓவியர்களின் வண்ணம்     தீட்டுதலில் உள்ளதா     அல்லது     வானவில்லில் உள்ளதா     என்று      நாம் ஆராய்கையில்     வண்ணம் சொல்கிறது     ஏன் இத்தனை ஆராய்தல்     நாங்கள் எப்போதும் அழகு தான்     நாங்கள் வண்ணங்களாக      இருக்கும் வரை      உங்கள் எண்ணங்களாக அல்ல     வண்ணங்கள் சொல்கின்றன     நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்     நீங்கள்+ மனிதர்கள் இடையே      வந்து     பாகுபாட்டை திணிக்க வேண்டாம்     என்று.....     என்ன ஒரு அற்புதமான பதில்     அல்லவா                              சிந்தனையுடன்      உங்கள் கிராமத்து குரல்