Skip to main content

வீரத்தமிழன்

வீரத்தமிழன்


மூன்று சங்கம் அமைத்து 

முத்தமிழை முத்தாய்
வடித்தவன்

அசராத கட்டிடக்கலைக் கலையை கற்றவன்

வீரத்திறக்கு பேர் போனவன்

பகைமையோடு இருப்பவரை பகடையாடுபவன்

ஆணும் பெண்ணும்
சரி நிகர் என்று உரைத்த புலவன் கொண்ட தமிழினம்


கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து பேசும் விவேகம் உடையவன்


தாயையும் தமிழையும் சுவாசிப்பவன்

நம்பினோரை காப்பாற்றுபவன்

தன்னுயிரை விடுத்து
தமிழ்க் கொடி ஏந்துபவன்

தமிழன் என்று மார்பு 
தட்டி சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா

தரணியில் தனிப்பெயர் பெற்றிடு


தரணித்தமிழ் போற்ற வாழ்ந்திடு

தமிழ் விதை விதைத்திடு

விருட்சமாய் விளைந்திடு

தமிழினம் காத்திடு

தன்மானத்தோடு வாழ்ந்திடு

விவசாயம் காத்திடு

வீறு கொண்டு எழுந்திடு

அடக்குமுறை எழுந்தால்

திறம்பட சிந்தித்திடு
பார் போற்ற வாழ்ந்திடு


வீழ்வது நாமாயினும்
வாழ்வது தமிழாகட்டும்

தமிழா தன்னகரில்லா
தனித்திறமையை 
வெளிக்கொண்டிடு

அகிலத்தில் பெயர் வெட்டிடு........


கிராமத்து குரல்

Comments

Popular posts from this blog

பிறை நிலா

தாய்த்தமிழ்

கம்பன் கையில் பிறந்த தமிழே பாரதியின் எழுத்தில் எழுந்த சுடரே பண்பையும், பகுத்தறிவையும் ஊட்டுகின்ற மொழியே அனைவரின் இரத்த நாளங்களில் ஊறிய தமிழே தனித்து பிறந்த மொழியாம் சிறந்தே  விளங்கும் மொழியாம் மூத்த மொழியாம் மூன்று சங்கம் கண்ட மொழியாம் மூவேந்தரை வளர்த்த மொழியாம்... தித்திப்பாய் இருக்கும்   மொழியாம் திகட்டாத மொழியாம் கலைகளையும்  பண்பாட்டையும் உருவாக்கிய மொழியாம் ஈடு இணையில்லா இறையை கூறும் மொழியாம் தத்துவ   மெய்பொருளை உள்ளடக்கிய மொழியாம் அயல்நாட்டவரை  அரவணைக்கும் மொழியாம் தன்னகரில்லா தரணி மொழியாம்......வாழ்க வாழவே..... உங்கள், கிராமத்து குரல்

உண்மைகள்

        உண்மைகள் ஒரு போதும்    சாவதில்லை......    ஊலாவிக்கொண்டே இருக்கிறது....    தக்க சமயம் பார்த்து    தர்மம் வெல்லும்.....    அகந்தைகள் கொண்ட மனம்    அழிவை நோக்கி செல்லும்....    பண்பை கொண்ட மனம்    அன்பை நோக்கி செல்லும்....